இந்து மதம் காப்போம்; இந்து மதம் காப்போம்; என்று சொல்லிக்கொண்டு உரிமை கொண்டாடி வருகிறார்களே? இவர்கள் எப்போது இந்து நடை முறைப்படி வாழ்ந்தார்கள்? டாக்டர் அம்பேத்கார், ஸ்ரீநாராயணன் குரு, அய்யங்காளி, ஐயப்பன், எம்.எல்.சி., வள்ளுவர் இவர்களது வாழ்க்கை முறையெல்லாம் (இவர்களுக்கு)தேவையில்லை. இவர்களெல்லாம் இந்து மதத்தில் இருந்து கொண்டு இப்படியா வாழ்ந்தார்கள்?. முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் எதிர்க்க வேண்டும் என்று இவர்கள் சொல்லிக்கொடுத்தார்களா? இவர்களுக்கெல்லாம் வராத இந்து பற்றுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது?
சாகாவில் இந்த தியாகிகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றி போதிக்காமல் இவர்கள் போதிப்பதெல்லாம் இந்து வெறிபிடித்த சுயநலம் கொண்ட பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஹெட்கேவர், வீர சாவர்கர், ராணாபிரதாப், அரவிந்தன் இவர்களது வாழ்க்கை முறையைத்தான் போதிப்பார்கள்.
தியாகி அம்பேத்கர் தலித் இனத்தை ஒருங்கிணைப்பதற்காக இந்து மதத்தில் தலித் இனத்தவர்களுக்கும் தனி உரிமை உண்டு என்று போதிப்பதற்காக 1956 ல் இந்து கோர்ட் பில் என்ற ஓர் நியமத்தை(சட்டத்தை) சட்டசபையில் சமர்ப்பித்தார்.
இதை அன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
நாம் இந்துவல்ல. ஒரு தலித் இனத்தவர்கள் ஒரு போதும் இந்துவாக முடியாது. இந்து மதத்திற்கே சொந்தக்காரர் அந்த பார்ப்பன வெறியர்கள்தான் என்று தான் அம்பேத்கர் மொழிந்தார்கள்.
இதையெல்லாம் சாகாவில் சொல்லிக் கொடுப்பதில்லை.
அம்பேத்கர் ஒரு மகான் என்று கூறிகிறார்களே இவர்கள். ஏன் அம்பேத்கரின் கூற்றை இவர்கள் மறைக்கின்றார்கள்?
எனது தலித் இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:
ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் சூழ்ச்சி தெரியாமல் நீங்கள் செயல்படுகிறீர்கள். உங்களை படிப்பற்றவர்களாக்கி, பிற மக்களை கொன்று குவிப்பதற்கு உங்களை ஓர் ஆயுதமாகத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பயன் படுத்துகிறார்கள்.
இந்த பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடை பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னைப்போன்று இஸ்லாம் என்ற கண்ணியத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றில்தான் உங்களுக்கு மோட்சம்(விடுதலை) இருக்கிறது. குர்ஆனின் நிழலில்தான் உங்களுக்கு விடுதலை உள்ளது.
அன்று இந்து மதத்தை எதிர்த்த டாக்டர் அம்பேத்கருக்கு என்னைப்போன்று இஸ்லாமிய சிந்தனை ஏற்பட்டிருந்தால் முதல் கணமே அந்த தலித் மக்களை, அடிமை இன மக்களை இந்த சத்திய மார்க்கத்திற்கு செல்ல வழி வகுத்து தந்திருப்பார். அவர் அதற்கு வலியுறுத்தியும் இருப்பார்.
இந்த சத்திய மார்க்கத்தின் நிழல் தெரியாததால்தான் அன்று அந்த மக்களை புத்த மதத்திற்கு அனுப்பினார். புத்தனை கடவுளாக ஏற்றுக்கொண்டதைத் தவிர விடுதலை என்ற கோட்பாட்டிற்கு அவர்கள் தள்ளப்படவில்லை.
நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆரம்பத் தொண்டனாக இருந்த போது, கேரளாவைச் சார்ந்த இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இந்த மாநாட்டின் தலைப்பு: "இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்." இந்தத் தலைப்பைக் கண்ட நான் பீறிட்டு எழுந்தேன். அடக்கவியலாத ஆத்திரம் என்னுள். நாங்கள் எதிர்ப்பை காட்டினோம். "அரசே! இபுறாஹீம் சுலைமான் சேட்டையும், இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் உடனேயே கைது செய்" என்று சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டினோம். நான் வேகந்தாழாமல் இந்தச் சுவரொட்டிகளை காவல் நிலையங்களிலேயே ஒட்டினேன்.
அப்போதும் என் வேகம் அடங்கவில்லை. காவல் நிலையங்களுக்கு உள்ளே சென்று இன்ஸ்பெக்டர் அறையில் அவருடைய தலைக்கு மேலையே ஒட்டினேன்.
ஆனால் இப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் எனக்கு நன்றாகப் புரிகின்றது அது. இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தவர்கள் முன் வைத்த முழக்கம் எத்துனை அர்த்தம் நிறைந்துள்ளது என்பது.
உண்மையில் இஸ்லாம் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றிடும் வழி காட்டுதலை வழங்கிடும் மார்க்கம். அதைப் புறக்கணித்தால் அழிவும் அட்டூழியங்களுமே விஞ்சும்.
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 22
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை
இறைவன் நாடினால் வளரும்.
Tuesday, December 26, 2006
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 21.
இதர
ஆர்.எஸ்.எஸ்,
நூல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment