Tuesday, December 26, 2006

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - பதிப்புரை.

தீவிர ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக இருந்த வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை புத்தகவடிவில் "இலக்கியச் சோலை" வெளியீட்டகத்தார் வெளியிட்டிருந்தனர்.

அதில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் ஓர் சிறு நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. வேலாயுதன் என்ற பிலால் அவர்களை மு. குலாம் முஹம்மது அவர்கள் நேரடியாக கேரளம் சென்று சந்தித்து அந்த நேர்காணலையும் இந்த புத்தகத்தில் சிறு இணைப்பாக இடம் பெற செய்துள்ளார். இனி இப்புத்தகத்தின் பதிப்புரையாக மு. குலாம் முஹம்மது அவர்களின் ஒரு சில வரிகளும் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணலும்.

பதிப்புரை

1996 ன் இறுதியில் வேலாயுதன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட
செய்தியை அறிந்தேன்

அன்பு நண்பர் E .M. அப்துற் றஹ்மான் அவர்களிடம் பிலால் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றேன். அவரும் இசைவு தந்தார்.

பிலால் அவர்களைப் பேட்டி கண்டேன். விடியல் (விடியல்வெள்ளி மாத இதழ்)ஜனவரி 1997 -ல் அட்டைப்படக் கட்டுரையாகத் தந்தேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எனத் தலைப்பிட்டிருந்தேன். என்னுடைய சந்திப்பின் போது இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று நான் கேட்ட போது, என்னுடைய மக்களின் (தலித் பெருங்குடி மக்களின்) விடுதலைக்காகப் போராடப் போகிறேன் என பதில் தந்தார்.

உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து மக்களிடையே புழங்கவிடுங்கள். அதைப் படித்து பலரும் பயன் பெறுவார்கள் என்றேன். அந்தப் பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

2003 -ல் நான் கேரளா சென்றிருந்த போது பிலால் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேளிவிப்பட்டேன். நண்பர் E.M. அப்துற் றஹ்மான் அவர்களே ஒரு பிரதியைப் பெற்றுதந்தார்கள். அதையே தமிழில் தந்திருக்கின்றோம்.

தமிழில் மொழி பெயர்க்கும் பணியை விரைந்து செய்து முடித்தவர் தம்பி முஷம்மில். அவருடைய முதல் முயற்சி இது. இது போல் ஆக்கப்பூர்வமான பணிகள் பலவற்றை அவர் செய்ய இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

வழக்கம்போல் இலக்கியச் சோலையின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் தொடர்கின்றது.

யா அல்லாஹ்; உன்னுடைய பாதையில் எடுத்து வைக்கும் இந்த முயற்சியை ஏற்றுக்கொள்வாயாக;

நிறைகள் எல்லாம் நிறைந்த அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் எங்களைச் சாரும்;

வஸ்ஸலாம்
மு. குலாம் முஹம்மது.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 23(பேட்டி-1)

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை

இறைவன் நாடினால் அடுத்த பதிவில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணல்.

2 comments:

Anonymous said...

தொடர் முழுவதும் படித்தேன். நல்ல தொடர். ஒவ்வொரு தொடருக்கும் முடிவில் அடுத்தத் தொடரின் சுட்டியைக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். அப்படியே, இப்படிப் பட்ட தொடர்களின் முதல் பதிவின் சுட்டியை ஓரத்தில் கொடுத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

அபூ சுமையா said...

கருத்துக்கும் அருமையான ஆலோசனைக்கும் மிக்க நன்றி சகோதரர் ஜி அவர்களே!

நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் நீங்கள் கூறிய மாற்றங்களை செய்கிறேன்.

அன்புடன்
அபூ சுமையா.