அப்போது அவர் கூறினார், முதலில் இறந்த மய்யித்தின் தந்தை ஒரு பெயர் தாங்கிய முஸ்லிமாக மட்டும் இருக்கிறார். அவருக்கு இஸ்லாத்தின் கோட்பாடே தெரியாது. அதனால் தான் தனது மகளின் மய்யித் முன் நின்று சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தார்.
இரண்டாவது பார்த்த அந்த நபரோ இஸ்லாத்தின் கோட்பாட்டை நன்றாக தெரிந்தவர். இஸ்லாம் மய்யித்திற்கு முன் நின்று கதறி அழுவதை போதிக்கவில்லை. தனது கவலைகளையெல்லாம் மனதில் மூடி மறைத்துக்கொண்டு தனது மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணம் மிக கண்ணியமாக மகனை அடக்கம் செய்கிறார்.
மகனை எனக்குத் தந்தவனும் இறைவன் தான்; அவனை எடுப்பதும் இறைவன் தான் என்ற நம்பிக்கையும், நாளை நானும் இறந்து விட்டால் மகனை நிச்சயம் அல்லாஹ் நாடினால் மறுமையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையும் தான் அந்த நபரின் உள்ளத்தில் இருந்த இஸ்லாமியக் கோட்பாடாகும்.
இஸ்லாத்தின் இந்த கோட்பாடும் என்னை நன்றாக அதன் பக்கம் ஈர்த்தது.
நான் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் எனது அப்பாவும் தண்ணி அடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் எனது அப்பாவிற்காக என்னுடைய இறைவனிடம் நான் பிரார்த்திக்கவும், இஸ்லாம் தற்கொலையை போதிக்கவில்லை என்றும் அப்பாவிற்கு எடுத்துச் சொல்லியிருப்பேன். இப்போது நான் அதைப்பற்றி மிகவும் வருந்துகிறேன்.
அதே போல் முஸ்லிம்களின் வியாபார விஷயத்திலும் நல்ல ஒரு கோட்பாட்டை கண்டேன். ஒரு முஸ்லிம் வியாபாரம் செய்தால் அவனுக்கு இலாபம் வந்து விட்டால் அல்லாஹ்வை துதிக்கின்றான். அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலோ கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு திருப்திபடுகிறான். ஏனென்றால் அவனுக்குத் தெரியும், இந்த வியாபாரத்தை தந்ததும் இறைவன் தான் என்று. எல்லாம் இறைவனின் நாட்டப்படிதான் நடக்கிறது என்று நினைத்து திருப்திப்படவும் செய்கிறான்.
இன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்னை போன்று தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த புலயன், குறவன், பறயன், வேலன் இவர்களையெல்லாம் தனது காரியத்தை சாதிப்பதற்காகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும் பயன் படுத்தி வருகிறார்கள்.
நான் கேட்கிறேன் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பார்த்து: எங்களது முன்னோர்களெல்லாம் எந்த ஒரு ஜாதி வேறுபாடுமில்லாமல், இந்து மதத்தை ஒன்றாக பகிர்ந்து தானே வாழ்ந்து வந்தார்கள்.
அப்படியிருக்க அவர்களது மத்தியிலே ஒரு பிளவை ஏற்படுத்தி பள்ளன் என்றும், பறையனென்றும் ஏற்படுத்தி தீண்டத்தகாதவர்கள் என்ற பட்டத்தையும் பெற்று தந்ததெல்லாம் நீங்கள் தானே?
அதோ எதிரி என்று நீங்கள் சொல்கின்ற முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுமா இந்த பாகுபாட்டிற்குச் சொந்தக்காரர்கள்?
இந்து ஒற்றுமை; இந்து ஒற்றுமை; என்று சொல்லிக்கொண்டு எங்களது காதில் பூவை சுற்றுகிறீர்கள். இந்த கேடுகெட்ட இயக்கத்தில்தான் நான் பன்னிரண்டு வருடமாக பணியாற்றினேன்.
படிப்பறிவு இல்லாத ஒரே காரணம் தான் இந்த பாவப்பட்ட தலித் இனத்தை மிக மோசமான ஒரு கட்டத்திற்கு அன்றிலிருந்தே கொண்டு சென்றிருக்கிறது. இவர்கள் வரலாற்றை ஆராய்ந்திருந்தால் இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின், பார்ப்பன சுயநலத்தின் தெளிவான தோற்றம் இவர்களுக்கு அன்றே தெரிந்திருக்கும். அது தெரியாததால் இன்றும் இந்த பார்ப்பன வெறியர்களின் அடியாட்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 21
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை
இறைவன் நாடினால் வளரும்.
Monday, December 25, 2006
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 20.
இதர
ஆர்.எஸ்.எஸ்,
நூல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment