ஒரு விதமாக எனது தங்கை 17 வயதை அடைந்தபோது, நான் சம்பாதித்ததின் மூலம் மூன்று பவன் நகையும் ஆயிரம் ரூபாய் வரதட்சணையும் கொடுத்து எனது தங்கையின் திருமணத்தை நடத்தி முடித்தேன்.
அம்மாவிடம் சென்று திருமணத்திற்காக அழைத்தேன். அம்மாவோ அவள் பெற்ற பிள்ளையின் திருமணத்திற்கு வரவே இல்லை. புது கணவனும் பிள்ளையுமாக அவள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எனக்கு இருந்த ஒரே சொத்து எனது தங்கை. தங்கையை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சென்று பார்த்து வருவேன். என்னால் முடிந்தளவு பொருட்களை வாங்கிச் செல்வேன். என் தங்கையைப் பார்த்துவிட்டு வரும்போது தான் எனது மனதுக்கு ஒரு நிம்மதி. மூன்று பிள்ளைகளைப் பெற்று அவள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். நான் தனியாக இருந்தேன்
இதன் பிறகுதான் எனது முழுக் கவனமும் ஆர் எஸ் எஸ் மீது சென்றது. ஆர்.எஸ்.எஸ். ன் பணியில் நான் தனியொரு சுகத்தைக் கண்டேன். கல் வெட்டும் தொழில் முடிந்தால் முழு கவனமும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காகத்தான்.
சிறு பருவத்தில் நான் ஊரில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும் போது சில இளைஞர்கள் வெளியில் நின்று இந்துக்களெல்லாம் ஒன்று; இந்து நடைமுறை ஒன்றாகும்; என்று பாடுவர். இவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்களா? என்று எனது சிறு வயதில் நான் பார்த்தவற்றை வைத்துக் கணித்துக் கொள்வேன்.
ஒரு கும்பலாக கோவிலுக்கு வெளியே இருந்து ஒரு நபர் சொல்லிக்கொடுக்க மற்றவர்களெல்லாம் இணைந்து பாடுவதும், கோவிலில் வேறு சில வணக்கங்களில் ஈடுபடுவதும்தான் என்னை அந்த அமைப்பில் ஈர்த்த்து. சொந்த பந்தம் எதுவுமில்லாத எனக்கு ஆர்.எஸ்.எஸ்.ஒரு சொந்தமாக மாறியது.
அதற்காக கடுமையாக உழைக்க நான் உறுதி பூண்டேன். எனது நாடு முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய ஒரு நாடாகும்; முஸ்லிம்கள் இந்த நாட்டின் கொள்ளைக்காரர்கள்; குழப்பக்காரர்கள்; கோவில்களை இடிக்ககூடியவர்கள்; என்றெல்லாம் அவர்கள் பாடம் சொல்லித்தந்தார்கள்.
இதையெல்லாம் கேட்ட எனக்கு அவர்களோடு ஒரு விதமான நெருக்கம் ஏற்பட்டது. அவர்களது சாகாவிலும் நான் கலந்து கொண்டேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சாகாவில் கலந்து கொள்வேன்.
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 6
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை
இறைவன் நாடினால் வளரும்.
Monday, December 04, 2006
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 5.
இதர
ஆர்.எஸ்.எஸ்,
நூல்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//முஸ்லிம்கள் இந்த நாட்டின் கொள்ளைக்காரர்கள்; குழப்பக்காரர்கள்; கோவில்களை இடிக்ககூடியவர்கள்; என்றெல்லாம் அவர்கள் பாடம் சொல்லித்தந்தார்கள்//
முஸ்லீம்களை இந்து மத பாதுகாப்பு என்று சில மடையர்கள் சொல்லி கொண்டு அலைகிறது
Post a Comment