இதுவரை, இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கட்டத்தில் முஸ்லிம் உலகில் பல்கிப் பெருகிய தீமைகளை அளவிட்டுக் காண்பிக்க ஒரு முயற்சி செய்துள்ளேன். இரண்டாம் கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட தீய சக்திகள் இஸ்லாமிய வரலாற்றின் மூன்றாம் கட்டம் தோன்றுவதற்கு ஒத்துழைத்தன. இம்மூன்றாம் கட்டத்தில் முஸ்லிம் உலகின் ஒரு பெரும் பகுதியில் ஐரோப்பியக் குடியேற்ற நாட்டு ஆட்சி தாபிக்கப் படுவதைக் காண்கிறோம். பிலிப்பைன் முதல் மொரோக்கோ வரையுள்ள பூகோளப் பகுதியில் எல்லா இஸ்லாமிய நாடுகளும் ஐரோப்பிய படையெடுப்புகளுக்கு இலேசாக இரையாகின. துருக்கி, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் தம் சுதந்திரத்தைக் காத்துக் கொண்டன. ஆனால் பல அம்சங்களில் அவையும் மிக்க மோசமான நிலையை அடைந்தன. முஸ்லிம்கள் தம் தன்னலப் பற்றுக்கும், இனப்பற்றுக்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை மதித்திருந்தால் இப்பெருநாசம் விளைந்திராது.
வளரும் - இறைவன் நாடினால் அடுத்த பதிவில்.
Wednesday, April 12, 2006
இஸ்லாம் - நேற்று, இன்று, நாளை! (14)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment