Sunday, December 24, 2006

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 17.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் பழகியதால் எனக்கு என்ன கிடைத்தது? கேவலம் தாழ்ந்த இன மக்களுக்குக்கூட தன்னுடைய மதத்தைப் பகிர்ந்து கொள்ள கொடுக்காத ஒரு வெறிபிடித்த இனம்.

அது மட்டுமல்லாமல் நாஸர் மஹ்தனி மலபாரிலே கோட்டக்கல் ஜும்ஆ மஸ்ஜிதில் ஒரு இரவு தொழுகை தொழுவதற்காக காரை விட்டு இறங்கினார். நானும் அவரோடு இருந்தேன். மஹ்தனி பள்ளியின் உள்ளே செல்லும் போது நான் வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். முன் வரிசையில் நிற்கின்ற ஒரு கூலிப்பணிக்காரனது காலின் கீழ் மஹ்தனியின் தலை. அது மட்டுமல்லாமல் பல பணக்காரர்களும், ஏழை மக்களும் ஒரே அணியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து தொழுவது என்னை நன்றாக கவர்ந்தது. ஆகா என்ன சமத்துவம் இது! என எனது மனம் மகிழ்ந்தது.

முன்பெல்லாம் கோவில்களுக்குச் செல்லும்போது தாழ்ந்த இனத்தைச் சார்ந்த என்னை கோவிலுக்குள் நுழைய விடமாட்டார்கள். வெளியே நின்று கும்பிட வேண்டியதுதான். அது மட்டுமல்லாமல் ஏதாவது நாட்டின் முக்கியமான நபர் கோவிலுக்கு வந்தால் பிற மக்கள் அன்று முழுவதும் சாமிக்கு லீவு போட வேண்டியதுதான்.

அப்போதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. முன் ஒருநாள் நான் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காகச் சென்றேன். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு மலையாள சினிமா நடிகர் சாமி தரிசனதிற்காக வந்திருந்தார். அவர் வந்திறங்கியதுதான் தாமதம், ஐயப்பனை தரிசிப்பதற்கு வந்த அந்த இந்து இளைஞர் எல்லாம் ஐயப்பனை மறந்து விட்டு அந்த சினிமா நடிகரை தரிசிக்க முன் வந்தார்கள். அது மட்டுமல்லாமல் முதலில் சென்ற எங்களை நிறுத்திவிட்டு நடிகரை உள்ளே விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட வேறுபாடு இந்து கலாச்சாரத்தில்.

அது தவிர தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு முதலமைச்சர்(முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைக் குறிப்பிடுகிறார்.) சாமி தரிசிக்க குருவாயூர் சென்றார். சென்றிறங்கியதுதான் தாமதம் அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு அடி,உதை.

இப்படிப்பட்ட வேறுபாடு இந்து கலாச்சாரத்தில். இதே சமயம் நான் முஸ்லிம்களின் நிலைமையை சிந்தித்தேன். முஸ்லிம் மந்திரி தொழுவதற்காக பள்ளியில் ஏறும் பொழுதும் மற்ற முஸ்லிம்கள் எல்லாம் வெளியே நிற்க வேண்டும் என்று சொன்னால் என்னவாகும் நிலைமை? மந்திரியும் அதை எதிர்பார்ப்பதில்லை. மக்களும் அதை செய்வதில்லை.

இப்படிப்பட்ட சமத்துவ, சகோதரத்துவத்தை நான் அந்த பள்ளிவாயிலின் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

அது மட்டுமல்லாமல் அங்கிருந்து நானும் மஹ்தனியும் மலப்புரம் மாவட்டம் திருவங்காடி என்ற இடத்தில் பானு காக்கா என்ற முஸ்லிம் நண்பனின் வீட்டிற்குச் சென்றோம்.

தாழ்த்தப்பட்ட என்னை மிகவும் கண்ணியமாகவும் பாசத்தோடும் அரவணைத்து நல்ல சாப்பாடும் தந்து அங்கேயே தங்க வைத்தார்கள்.

இப்படிப்பட்ட தன்மைகளை வலியுறுத்துகின்ற இஸ்லாம் மார்க்கத்தில் நானும் இணைந்து கொண்டால் என்ன? என்ற கேள்வி என்னை ஆட் கொண்டது.

நான் இதை ஒரு நாள் மனைவி சாந்தாவிடம் கூறினேன். அவள் இதற்கு சற்று தயக்கம் தெரிவித்தாள். உடனே நான் முஸ்லிம்களாலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களாலும் நமது வாழ்க்கையில் ஏற்பட்ட வித்தியாசங்களையும் இஸ்லாத்தின் தன்மைகளையும் எடுத்து விவரித்தேன்.

இருந்தாலும் அவளது மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

ஏனென்றால் முஸ்லிம்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரி அல்லவா? என்ற எண்ணங்கள் எல்லாம் அவளுக்குள் உதித்தது.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 18

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை

இறைவன் நாடினால் வளரும்.

3 comments:

மரைக்காயர் said...

//ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் பழகியதால் எனக்கு என்ன கிடைத்தது? கேவலம் தாழ்ந்த இன மக்களுக்குக்கூட தன்னுடைய மதத்தைப் பகிர்ந்து கொள்ள கொடுக்காத ஒரு வெறிபிடித்த இனம்.//

ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டும் வார்த்தைகள்!

ஹாஜியார் said...

//ஏனென்றால் முஸ்லிம்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரி அல்லவா? என்ற எண்ணங்கள் எல்லாம் அவளுக்குள் உதித்தது.//

முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ? ஆனால் இஸ்லாம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளும். நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றும் அனைத்து முஸ்லிம்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள்.

தனது மிகவும் பாசத்திற்குரிய சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) அவர்களை நயவஞ்சகத்தனமாக கொன்று அவர்களின் வயிற்றைக் கீறி குடலை எடுத்து கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு ஈரலை பிய்த்து எடுத்து கடித்துத் துப்பி கோரதாண்டவமாடிய ஹிந்தா அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் சமயத்தில் இவ்வாறு தான் தனது கணவனிடம் "தன்னை முஹம்மது(ஸல்) அவர்கள் மன்னிப்பார்களா? என்னை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா?" என்று கேட்டு வீட்டினுள் பயந்து ஒதுங்கி நின்றார்.

அவர் இஸ்லாத்தை ஏற்பதாக கூறிய பொழுது அனைத்தையும் மறந்து இன்முகத்துடன் அவருக்கு வாழ்த்துக்கள் கூறிய எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வழியை பின்பற்றும் முஸ்லிம்கள் ஆர்.எஸ்.எஸ் என்ன? வேறு எந்த மனித விரோத காட்டுமிராண்டி இயக்கத்தவராக இருந்தாலும் மனம்திருந்தி வருத்தம் கொள்வார்கள் எனில் நிச்சயம் அவர்களை ஏற்றுக் கொள்ளும்.

ஹாஜியார்.

மனிதன் said...

"முன்பெல்லாம் கோவில்களுக்குச் செல்லும்போது தாழ்ந்த இனத்தைச் சார்ந்த என்னை கோவிலுக்குள் நுழைய விடமாட்டார்கள். வெளியே நின்று கும்பிட வேண்டியதுதான்"

"முன் ஒருநாள் நான் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காகச் சென்றேன்".???????.

THE CAT IS OUT OF THE BAG.
With Love,
Ramachandhran.