Wednesday, December 20, 2006

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 14.

அது மட்டுமல்லாமல் இவ்வளவு சுலபமாக முஸ்லிம்களுக்கு இந்த அவமானம் நடந்த பிறகும் இன்னொரு முஸ்லிம் சமூகம் அதற்காக கொஞசம்கூட வருத்தப்படவில்லையே ஏன்? அதற்கெதிராக பேசுவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது என்னுள் வியப்பை ஏற்படுத்தியது.

இப்படியாக முதன் முதலில் கொல்லம் மாவட்டத்தில் முன்னத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டேன்.

இப்படித்தான் எனக்கு மஹ்தனியின் அன்வாருஷ்ஷேரியுமாக [ஸ்தாபனம்] பந்தம் ஏற்பட்டது. இந்த ஸ்தாபனம் நாசர் மஹ்தனியால் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக நிறுவப்பட்டது.

இந்த நிறுவனத்தைப் பற்றித்தான் நான் எனது ஆர்.எஸ்.எஸ் வாழ்க்கையில் மிகவும் கோபமாக உரையாற்றினேன். இந்துக்களை கொன்றொளிப்பதற்காக நாசர் மஹ்தனியால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் அன்வாருஷ்ஷேரி என்றும், தீவிரவாதத்தை வளர்க்கின்ற ஒரு முக்கிய நிறுவனம் என்றும், சிறுவர்களுக்கு ஆயுதப்பயற்சி கொடுக்கின்ற ஒரு நிறுவனம் என்றெல்லாம் பொய்யைப் பேருரையாக ஆற்றியது எனது நினைவுக்கு வந்தது.

ஓர் இஸ்லாமிய நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த நான் தங்குவதும், அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு என் மேலுள்ள பாசமும் பரிவும் என் மனதை நன்றாக கவர்ந்தது. எங்களை இவர்கள் தாழ்வாக பார்ப்பார்கள் என்றெல்லாம் நான் முன்னால் நினைத்ததுண்டு. இதற்கெல்லாம் நேர் மாறாகத்தான் அவர்களது[முஸ்லிம்களது]பழக்க வழக்கங்கள் இருந்தன.

சொல்லித் தீர்க்கமுடியாத அரவணைப்பு, அவர்களுடன் ஒன்றாக இருந்து சாப்பிடுவது, அவர்களோடு ஒன்றாக ஒரே இடத்தில் துங்குவது, இதெல்லாம் என் மனதில் வேலாயுதன் என்ற நான் ஓர் பிலாலாக மாறுவதற்கு பாதை போட்டுத்தந்தன.

அன்வாருஷ்ஷேரி என்ற நிறுவனம் குறிப்பாக சொல்லப்போனால் ஒரு யத்தீம்கானாவாகும்[அநாதைகள் விடுதி]. அங்குள்ள அநாதைப் பிள்ளைகள் என்னோடு கொண்டிருந்த மரியாதை இதெல்லாம் தாழ்ந்த இனத்தைச் சார்ந்த எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு தலைவரிடம் கூட இப்படிப்பட்ட எளிமையான, அன்பான குணங்களை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.

யத்தீம்கானாவில்(அநாதைகள் விடுதியில்) நான் கொஞ்சம் நாள் பி.டி.பியின் ஒரு ஸ்ஷார்த்தியாக[வேலாயுதனாக] தங்கினேன்.

எல்லா வியாழக்கிழமையிலும் அந்த அநாதைகள்:

"இறைவா, எங்களுக்கு உணவளித்தவர்களுக்கு நீ உணவளிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!"
என்றெல்லாம் பிரார்த்தனை செய்வதை நான் பார்த்தேன். அப்போது தான் எனது மனதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வாழ்க்கை தென்பட்டது. இந்த பிள்ளைகளைப் பற்றியா நாங்கள் தீவிரவாதிகளென்றும், தீவிரவாதத்தை ஊட்டுகின்ற நிறுவனம் என்றும் இந்நிறுவனத்தில் தீவிரவாதத்தை பிஞ்சு உள்ளங்களில் ஊட்டுகிறார்கள் என்றும் பொய்யைப் புனைந்துரைத்தோம்?.

இந்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அபாண்டமான பொய்யைச் சொன்னார்கள் என்ற எண்ணம் எனது மனதில் தெரிந்தது. மேலும் நாசர் மஹ்தனியையும் இவ்வாறுதான் தீவிரவாதி என்று முத்திரை குத்தினார்கள் என்ற உண்மையும் எனக்குத் தெரிந்தது.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 15

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை

இறைவன் நாடினால் வளரும்.

2 comments:

மரைக்காயர் said...

உண்மைகளை வெளிக்கொணரும் அற்புதமான ஒரு தொடர். இதை இங்கே பதிவிடுவதற்கு நன்றி.

அபூ ஸாலிஹா said...

RSS என்பதன் கோரமான முகத்தை, மனித சமுதாயத்தில் துவேஷ விஷம் விதைத்த பல விஷயங்களை இந்த ஆக்கங்களின் மூலம் தெரிவித்திருக்கிறீர்கள்.

துணிச்சலான உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!