Monday, December 18, 2006

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 12.

ஒரு நாள் இவர்கள் என்னிடம், "வேலாயிதா, நீ மஹ்தனியோடு சேர்ந்து நின்று பணியாற்று. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பிஜேபி க்கும் பதிலடி கொடுப்பவர் அவர்தான்" என்று சொன்னார்கள்.

ஒரு இரவில் அவர்கள் என்னை மஹ்தனியைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார்கள். அன்று தான் முதன் முதலாக முஸ்லிம் நண்பர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
மஹ்தனியின் அந்த விகாரமான தோற்றத்தை பார்ப்பதற்கு எனக்கு ஒரு வித அச்சமாகத்தான் இருந்தது. தலித் இனத்தை, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த என்னை அவர் ஏற்றுக்கொள்வாரா? என்னிடம் பேசுவதற்கு விருப்பப்படுவாரா? என்றெல்லாம் எனது மனம் கலங்கியது.

இவ்வாறாக ஒரு விதத்தில் எர்ணாகுளம் ஃபிரீடம் சாலையில் இருக்கின்ற என்.எம்.மெஹ்பூபின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். வீட்டின் மேல் மாடிக்கு என்னை அழைத்துச் சென்று தனிமையாக ஓரிடத்தில் உட்கார வைத்தார்கள். நாஸர் மஹ்தனியை பார்ப்பதற்கு ஒரு வித அச்சமாகத்தான் இருந்தது.

ஏனென்றால் நானும் ஓர் ஆர்.எஸ்.எஸ். காரனாகத்தானே இருந்தேன். மஹ்தனி மீது வெடிகுண்டு எறிந்து அவரது காலை முறித்தது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?. என்னை ஏதாவது செய்யப்போகிறாரா?. தனிமையில் சிக்கிக்கொண்டேனோ? என்றெல்லாம் எனது மனம் அச்சத்தால் அல்லாடிக்கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழிந்ததும் அதி விகாரமானத் தோற்றத்தில் பிரகாசமான முகத்தோடு நாஸர் மஹ்தனி படியேறி வந்தார். ஒரு கால் ஊனமானதால் வேறொரு நபரின் தாங்கலோடு ஏணிப்படி ஏறி வந்து என் முன்னே உட்கார்ந்தார்.

பத்து நிமிடம் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். என்னைப் பற்றியும் வீட்டு நிலவரம் பற்றியும் ரொம்ப அக்கரையோடும் ஆவலோடும் விசாரித்தார்.

எர்ணாகுளத்தில் மஹ்தனி கட்சியின் மாநாடு நடக்கிறது. கட்சியில் முழுமையாகச் செயல்பட வேண்டும் என்று கூறி பி.டி.பியை எனக்கு அறிமுகப் படுத்தினார்கள். நாஸர் மஹ்தனியின் கட்சியின் பெயர் மக்கள் ஜனநாயக கட்சி [PEOPLES DEMOCRATIC PARTY]PDP எனச் சுருக்கமாக கூறுவார்கள்.

எர்ணாகுளத்தில் கட்சியின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். மஹ்தனியின் தீப்பொறி பறந்த பேருரையை நான் கேட்டேன்.

ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி க்கு எதிராக அவரது பேச்சும், ஆவேசமும் தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கமுள்ள அவரது மன ஈர்ப்பும் என்னை நன்றாக கவர்ந்தது. மேடையில் வேலாயுதன் என்று என்னையும் அறிமுகப்படுத்தினார்கள். பிஜேபியையும்,ஆர்.எஸ்.எஸ்ஸையும் எதிர்த்து வரும்போது உன்னை ஒரு மேடையிலும் சேர்க்கமாட்டாங்கடா. பறைய இனத்தைச் சார்ந்த உனக்கு யாரும் அடைக்கலம் தரமாட்டார்கள் என்றெல்லாம் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இதற்கு முன் என்னிடம் கூறியிருந்தார்கள்.

பல மேடைகளில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் சதி வேலைகளை சொல்வதும், தலித்துகளுக்காக மேடையில் பேசுவதற்கும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

இப்படி நாஸர் மஹ்தனியின் கட்சியான ஜனநாயக மக்கள் கட்சியின் ஒரு முக்கியப் பங்காளியாக நான் மாறினேன். முஸ்லிம் மக்களின் அரவணைப்பும் அவர்களுக்கு என்னிடமிருந்த பாசகுணமும் என் மனதை பெரிய அளவில் மாற்றியது.

இருந்தாலும் கட்சியின் ஒரு கமிட்டிக் கூட்டம் எர்ணாகுளத்தில் நடக்கும் போது நாஸர் மஹ்தனியின் மாவட்ட செயலாளர் சித்திரபானு என்ற நபர் என்னிடம் கூறினார்:

"வேலாயுதா நீ உஷாராக இரு. மஹ்தனி உன்னை கொலை செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். காரன் கொன்றதாக கூறிவிடுவார்."

கட்சிக்காக ஒரு இரத்த சாட்சி என்ற முறையில் இந்த விஷயம் எனது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. இதை நான் நேரடியாக மஹ்தனியிடம் கூறினேன். மஹ்தனி கோபப்பட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளர் இருக்கும் போதுதான் இதை நான் மஹ்தனியிடம் கூறினேன். அப்போதுதான் வெடித்தது கலகம். சித்திரபானுவின் மகன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன். சித்திரபானுவும் இரகசியமாக ஆர்.எஸ்.எஸ்ஸில் பணிபுரிந்து வந்தார். என்னை மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் கை கொண்ட தந்திரம் இது.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 13

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் -முன்னுரை

இறைவன் நாடினால் வளரும்.

No comments: