Sunday, November 27, 2005

இவ்வலைப் பதிவினைக் குறித்து........


நாம் கடக்கும் ஒவ்வொரு கால நொடியிலும் நம் வாழ்வின் பொன்னான திரும்பக் கிடக்காத தருணங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தருணங்களில் நாம் பெறுபவைகளும் இழப்பவைகளும் எண்ணிலடங்கா. அவற்றை கணக்கெடுத்தால் நாம் பெறுபவைகளை விட தொலைப்பவைகளே அதிகமாக இருக்கும்.

அவற்றில் மிகவும் முக்கியமானவைகளில் ஒன்று தான் நாம் படிப்பவைகள். நல்ல நூல்கள் சிறந்த சிந்தனையாளனை உருவாக்கும். நம்மில் படிப்பவர் பலரகம். தூக்கம் வருவதற்காக படிப்பவரிலிருந்து, அறிவை வளர்ப்பதற்காக படிப்பவர் வரை ஆளாளுக்கு படிப்பதன் காரணங்கள் வேறுபடுகின்றன. எந்த காரணத்திற்காக நூல்கள் படிக்கப் பட்டாலும், மனிதரில் மிகச் சிறந்த மாற்றங்களை உருவாக்குவதில் நூல்கள் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன என்பது நிதர்சனமான உண்மையாகும்.

அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த நூல்களைப் பாதுகாத்து, வரும் தலைமுறைகளுக்கு கைமாற்றுவது நம்மீது கடமையாகும். ஏனோ நம்மில் பலர் இதனை ஒரு பெரிய விஷயமாகவே கருதுவதில்லை. இன்னும் படிப்பவைகளை அந்நேரமே வெகு எளிதில் மறக்கவும் செய்கிறோம். ஒருவருடைய வாழ்வில் இழப்பவைகளில் மிகப் பெரிய இழப்பாகும் இது. எனவே நான் படித்தவைகளில் சிலவற்றை நான் மறக்காமல் இருப்பதற்காகவும், அதனை மற்றவர்களுக்கும் பகர வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு பதித்து வைக்கிறேன்.

No comments: